1941ல் ஜப்பான் யுத்தம் நடந்தபோது அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தன்னார்வத்தோடு இந்தியன் இன்டிபெண்டன் லீகில் இணைந்தார். தன்னால் இயன்ற உதவிகளை செய்தார். பின் ஊர்காவல் படையில் பணியாற்றினார்.
பிறகு 1964ல் தாய் நாடு வந்து சேர்ந்தார். சென்னை வியாசார்பாடி பிவி காலனியில் தனக்கொன்று ஒரு வியாபாரத்தை துவங்கிகொண்டு பின் சிலம்பம் விளையாட்டையும் கற்று தர ஆரம்பித்தார். ஏராளமானோர்க்கு இவர் சிலம்பம் பயிற்சியளித்துள்ளார்.
1991ல் நமது மஹாகுருவின் தனித்துவமான விளையாட்டை பற்றி கேட்டறிந்த தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரும், இயக்குநருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களும் இவரிடத்தில் சிலம்பம் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
He learned silambam from the above mentioned masters. After the successful training he became a aasan. Later he joined INA in the year of 1941 in that period of time nethaji formed INA in Myanmar against to British government. As well he joined Indian independent league to save his mother nation.
மேலும் அரசு தொலைகாட்சியான பொதிகை டிவியிலும் சிலம்பம் பற்றிய தகவல்களை பேட்டியாக அளித்தள்ளார்.
மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்று தருபவர். தனித்துவம் கொண்ட விளையாட்டிற்கு சொந்தக்காரர்.
இவர் கற்றுக்கொடுக்கும் காலடி முறைகள் கம்பு கட்டும் முறைகள் வேறெங்கும் காண முடியாது என்பது மற்றொரு சிறப்பாகும்.
இவர் பழங்கால கச்சை கட்டும் முறையை கையாண்டவர் என்பது குறிப்பிட தக்கது.
After a long back He returned to his mother nation in the year of 1964. Then he started silambam school at tamil nadu vyasarpadi , b.v colony, Chennai.
He teaches Silambam , vel kambu, surul val veechu, kutthu varisai, adi varisai , pudi varisai, thattu varisai, kattai kambu, PandhaVeechu padam, meditation.
Padma shree .Kamalahasan who knows as a actor&director in tamil nadu . He learned silambam from our mahaguru in 1990.
Our maha guru dedicated his life hole for silambam. Our maha guru V.vettai devar expired on 10-04-2008.
After long back his students decided to teach the maha guru silambam method to all. Then they formed the silambam committee in the name of (SCHOOL OF INDIAN SILAMBAM.)
இப்படியாக தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிலம்பம் விளையாட்டிற்கென்று அற்பணித்த. நமது மஹா குரு 10.04.2008 அன்று ஈசனடி சேர்ந்தார்.
இந்த மாபெரும் விளையாட்டினை மறையாமல் காத்திடவும், இனி வரும் தலைமுறையினர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இதுவரை செவிவழி கல்வியாக இருந்த கம்பு விளையாட்டினை புத்தக வடிவில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
மஹா குரு ஏ.வேட்டை தேவர் ஐயா அவர்களின் பாடமுறைகளில் 50 சதவிகித பாடங்கள் இங்கே உங்களுக்கு புத்தகமாக தொகுக்கப்பட்டள்ளது.
மற்ற பாடங்கள் அடுத்ததாக வெளியிடவிருக்கும் வேட்டையர் கம்பு விளையாட்டு பாடநூல் புத்தகத்தில் வெளியிடப்படும்.